சினிமாக்களில் தான் பிரிந்த குடும்பங்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து படம் பார்ப்போரை மகிழ்ச்சியடையச் செய்வார்கள்.அபப்டி ஒரு சம்பவம் வேலூரில் நடந்து மக்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
இப்போதைய ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2020ல் அரசு அனுமதி பெறாமல் கார்த்தி என்பவர் நடத்தி வந்த சிறுவர் பாதுகாப்பு இல்லத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து மூடியது. அப்பொழுது அந்த இல்லத்தில் தங்கி படித்து வந்த மல்லி என்கிற பிரியா அதிகாரிகளிடம் குமுறி அழுதார். ‘நான் வீட்டை விட்டு வந்து விட்டேன். ஒரு பெண்மணி நீ இங்கு சேர்ந்து விடு. பாதுகாப்பாக இருக்கும்’ என்றார். ஆனால் அவர்கள் என்னை எட்டாம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர். அத்துடன் வீட்டு வேலைகளைச்செய்யும்படி வற்புறுத்தினர்’ என்று கண்ணீர் விட்டு அழுதார். அவரை மீட்ட குழந்தைகள் நல குழுவினர் மல்லியை வேலூரில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் படிக்க வைத்தனர். அங்கு அவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்தார்.
இந்நிலையில் சோளிங்கரில் அனுமதி பெறாமல் இல்லம் நடத்திய கார்த்தி, மல்லி என் தங்கை என்று சட்டப்பணிகள் குழுவிடம் மனு அளித்தார். ஆனால் மல்லி தனது சொந்த ஊர் வந்தவாசி என்றும் தந்தை ஏழுமலை என்றும் தாய் சந்திரா என்றும் சொல்ல மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மல்லி மற்றும் தந்தை ஏழுமலைக்கு மரபணு சோதனை நடத்தினர். அதில் ஏழுமலை தான் மல்லியின் தந்தை என்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சஞ்ஜீத், குழந்தைகள் குழு தலைவர் வேதநாயகம் மற்றும் அதிகாரிகள் கலெக்டர் குமரவேல் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.அவர் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மல்லி என்கிற பிரியாவை ஒப்படைத்தனர்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி அரசு பெற்றோர்களிடம் ஒப்படைத்தது வேலூர் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-அன்புவேலாயுதம்