1 பெண்ணை விரும்பிய 2 சகோதரர்கள் - ‘வாலி' பட பாணியில் பகீர் சம்பவம்

ஏற்காடு அருகே தன் மனைவி மீது தகாத உறவு கொண்ட அண்ணனை, தம்பியே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 பெண்ணை விரும்பிய 2 சகோதரர்கள் - ‘வாலி' பட பாணியில் பகீர் சம்பவம்

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கொம்மக்காடு பகுதியை சேர்ந்தவர் வினோத். கூலித்தொழிலாளி. இவரது தம்பி விவேக்.

விவேக்கிற்கும், வெண்ணிலா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. விவேக்கின் மனைவி வெண்ணிலாவை விவேக்கின் அண்ணன் வினோத் திருமணம் ஆவதற்கு முன்பே காதலித்து வந்ததாகவும், வெண்ணிலாவும் வினோத்தைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குடும்பத்தாரின் வற்புறுத்தலின்பேரில் வெண்ணிலா வினோத்தின் தம்பி விவேக்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வெண்ணிலாவின் திருமணத்திற்கு பிறகும் வினோத்துடன் பழகி வந்துள்ளார். இதுதொடர்பாக பலமுறை விவேக் தனது அண்ணன் வினோத்திடம், ‘என் மனைவியுடன் பேசுவதை நிறுத்திக்கொள்’ எனக் கூறி வந்துள்ளார். ஆனால் வெண்ணிலாவும், வினோத்தும் அவர்களது தொடர்பை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து கடந்த 19ம் தேதி விவேக்கின் அண்ணன் வினோத் ஏற்காட்டுக்கு பக்கத்தில் உள்ள எஸ்.புத்தூர் செல்லும் வழியில் காட்டெருமை முட்டி தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி விவேக் நாகலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இச்சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார் காட்டெருமை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்து மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தம்பி விவேக்கிடம் ஏற்காடு போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின் முரணான பதிலை விவேக் கூறியுள்ளார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் விவேக்கின் மனைவி வெண்ணிலா மற்றும் எஸ்.புத்தூர் ஊர் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வினோத்தை காட்டெருமை தாக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் பின்னர் விவேக்கை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் விவேக்கின் மனைவியுடனான தகாத உறவால் விவேக்குக்கும், அவரது அண்ணன் வினோத்திற்கும் வெண்ணிலா தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவேக் கல்லால் வினோத்தை தாக்கியதில் சுயநினைவு இழந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். அவரை விவேக் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டெருமை முட்டியதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ‘விவேக், வினோத் பேரே ஒத்துமையா வச்சிருக்காங்க. ஒரு பொண்னால சகோதரர் உயிர் போயிடுச்சி.

வெண்ணிலாவுக்கும், வினோத்துக்கும் முதல்ல லவ் இருந்திருக்கு. பெத்தவங்க ஏதோ சூழ்நிலையால விவேக்குக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க.

விவேக்குக்கு வெண்ணிலா மேல பிரியம். கல்யாணம் செஞ்சிக்கிறாரு. கல்யாணம் ஆகி 7 நாள் மட்டும் விவேக் கூட வாழ்ந்திட்டு வெண்ணிலா பிரிஞ்சி தாய் வீட்டுக்கு போயிடறாங்க.

தாய் வீட்டுல 7 வருடமா இருந்திருக்காங்க. புகுந்த வீட்டுக்கு வர்றதும், போறதுமா இருந்து இருக்காங்க. அம்மா வீட்ல இருக்கும்போதே வினோத் புருஷன் மாதிரி அங்க போயிடுவார் போல.

அதுல இருந்தே அண்ணுனுக்கும், தம்பிக்கும் உரசல். விவேக்கும் தம்பி பொண்டாட்டி அவ. இனி மேல தொந்தரவு செய்யாத விலகிருன்னு புத்தி சொல்லியிருக்காரு. அத காது கொடுத்து கேட்கல வினோத். சம்பவம் நடந்த அன்று திருட்டுத்தனமா வெண்ணிலாவ பார்க்க போயிட்டு குறுக்கு வழியில வந்திருக்காரு வினோத்.

அப்ப விவேக் பார்த்து ரெண்டு பேத்துக்குள்ள வாக்குவாதம் ஆயிட்டுது. கோபமான விவேக் கல்லால வினோத்தை தாக்கிட்டாரு. சத்தம்கேட்டு வெண்ணிலா ஒடி வந்துட்டாங்க.

ரெண்டு பேருமே வினோத் தூக்கிட்டு மருத்துவமனைக்கு போயி காட்டேருமை தாக்கிட்டதாக சொல்லியிருக்காங்க. விசாரணையில உண்மை தெரிஞ்சு போச்சு. சிகிச்சையில இருந்த வினோத் இறந்துபோயிட்டதால இப்ப விவேக் மேல கொலை முயற்சி வழக்கு பதிவாகி ரிமாண்ட் செஞ்சிட்டோம்’ என்றார்கள்.

பின்னர் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜாவிடம் பேசினோம். ' தகவல் வந்தவுடனே ரேஞ்சர் விசாரிச்சிருக்காங்க. காயம் காட்டெருமை தாக்கிய மாதிரி இல்லைன்னு சொல்லிட்டாங்க.

நாங்க வெண்ணிலாவையும், விவேக்கையும் கூப்பிட்டு விசாரிச்சோம். முரண்பாட பேசினாங்க. அதுல தெளிவா எங்களுக்கு தெரிஞ்சுப் போச்சு. இதன் பிறகு உண்மையை ஒத்துகிட்டாங்க’ என்றார்.

- பழனிவேல்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com