கொடைக்கானலில் பல லட்சம் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, பாண்டா கரடி, வாத்து, ஒட்டகச்சி விங்கி ஆகிய உருவங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 60-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று துவங்கியது. விழாவை தமிழக வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
தொடர்ந்து, பல லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பாண்டா கரடி, வாத்து, ஒட்டகச்சி விங்கி ஆகிய உருவங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
மேலும், காட்டெருமை, வரிக்குதிரை, டோரா புஜ்ஜி பொம்மை ஆகிய உருவங்கள் காய்கறிகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் , கருணாநிதி , தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் உருவங்கள் காய்கறிகளில் செதுக்கப்பட்டுள்ளது. இவை, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
விழாவில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி , சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், உணவுத்துறை மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூங்கா முழுவதும் பூத்துள்ள வண்ண வண்ண மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.