தஞ்சாவூர்: ஜமாத் தலைவருக்கு வந்த பார்சலில் ‘மண்டை ஓடு’- போலீஸ் விசாரணை

திருவையாறு அருகே ஜமாத் தலைவருக்கு வந்த பார்சலில் மண்டை ஓடு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர்: ஜமாத் தலைவருக்கு வந்த பார்சலில் ‘மண்டை ஓடு’- போலீஸ் விசாரணை

திருவையாறு அருகே ஜமாத் தலைவருக்கு வந்த பார்சலில் மண்டை ஓடு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம்,திருவையாறு அருகே முகமது பந்தர் ரஹீம் நகரை சேர்ந்தவர் முகமது காசிம் , முகமது பந்தர் ஜமாத் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு நேற்று மதியம் பிரான்சிஸ் கொரியரில் இருந்து தொலைபேசி மூலம் அலுவலர்கள் முகமது காசிம் என்ற பெயரில் பார்சல் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பார்சல் வாங்க முடியவில்லை. மாலை 7 மணி அளவிற்குக் கொரியர் அலுவலகத்தில் இருந்து பார்சல் கொண்டு வந்து கொடுத்து உள்ளனர். பார்சலை வாங்கிப் பிரிக்காமல் இன்று தனது மகன் முகமது மஹாதிரை விட்டுப் பிரித்துப் பார்க்க சொல்லி இருக்கிறார் .

பார்சலை பிரித்துப் பார்த்த மஹாதிர் மண்டை ஒரு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் துர்நாற்றம் வீசி உள்ளது.

உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் திருவையாறு டி.எஸ்.பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வந்து மண்டை ஓடை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். பார்சலில் அனுப்புநர் முகவரியில் நவ்பாய் கான் என பாதி ஆங்கிலம் தமிழ் கலந்து உள்ளது.பார்சலில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு பார்சல் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com