தென்காசி: கோயில் நிர்வாக அலுவலர் தற்கொலை - என்ன காரணம்?

தற்கொலை
தற்கொலை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணன் கோயில் நிர்வாக அதிகாரியாக பாலசரவணகுமார் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணன் கோயில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் பாலசரவணகுமார் ( 35).

கடந்த 17-ம் தேதி அவர் தனது வீட்டிலிருந்த போது திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். இளைஞரான அவர் திடீரென இறந்து போக காரணம் இந்து அறநிலையத்துறையில் உள்ள உயர் அதிகாரிகள்தான் என்கிறார்கள் சக நிர்வாக அலுவலர்கள்.

இது குறித்து மூத்த நிர்வாக அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலசரவணகுமார் விடுப்பில் சென்றார். ஒரு மாத காலம் விடுப்பிலிருந்தவர் பின்னர் டூட்டியில் சேர்ந்தார்.

ஆனால், அவரது லீவு நாட்கள் முறைப்படுத்தப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாய் அவருக்கு சம்பளம் வரவில்லை. விடுமுறையை முறைப்படுத்த அவர் எடுத்த முயற்சிகளுக்கு சில உயர் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதன் விளைவு அவரால் சம்பளம் வாங்க முடியவில்லை.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைக் காரணம் காட்டி விடுமுறை நாட்களை ரிக்கார்டிகலாய் முறைப்படுத்தி சம்பளம் தாருங்கள் என்று இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதியிருக்கிறார்.

யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலேயே அவர் இறந்து போனார். அவரது இறப்பிற்கு காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com