கோயிலுக்குள் பதற்றத்துடன் வெளியேறிய பெண்
கோயிலுக்குள் பதற்றத்துடன் வெளியேறிய பெண்

சாமி சிலையில் இருக்கும் நகைகளை குறிவைத்து கொள்ளையடித்த பெண்

பெண் ஒருவர் அடிக்கடி கோயிலுக்குள் செல்வதும், பதற்றத்துடன் வெளியே வருவதுமாயிருந்தது தெரிய வந்தது.

கடையநல்லூர் அருகே சாமி சிலையில் இருக்கும் நகைகளை குறிவைத்து பெண் கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பக்கம் உள்ள மாவடிக்கால் கிராமத்தில் காளியம்மன் கோயில் இருக்கிறது.கடந்த வாரம் இக்கோயிலில் கொடைவிழா நடைபெற்றிருக்கிறது. இதற்காக காளியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் காளி சிலை கோயில் வெளிப்பிரகாரத்தில் சப்பரத்தோடு இறக்கி வைக்கப்பட்டது. மறுநாள் கோயில் பூசாரி சாமி சிலையை பார்த்த போது கழுத்தில் கிடந்த தங்க நகையை காணோம், யாரோ கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தது. இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான ஸ்பெஷல் டீம் கோயில் கொள்ளையரை வலை வீசி தேடியது. தனிப்படை போலீசார் கோயிலைச்சுற்றி உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடிக்கடி கோயிலுக்குள் செல்வதும், பதற்றத்துடன் வெளியே வருவதுமாயிருந்தது தெரிய வந்தது.

அந்தப் பெண் யார் என்று விசாரித்தபோது, அவர் பெயர் சண்முகசுந்தரி, 35 வயது, சங்கரன்கோயில் பக்கம் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த அருள் செல்வம் என்பவரின் மனைவி என்பது தெரியவந்தது.உடனடியாய் போலீசார் ராமசாமியாபுரம் சென்று சண்முகசுந்தரியைப் பிடித்து விசாரித்தனர்.

போலீசின் தீவிர விசாரணைக்குப் பிறகு அவர் நான்தான் சாமி நகையை திருடினேன் என்று ஒத்துக் கொண்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜா நம்மிடம் கூறுகையில், சண்முகசுந்தரி காளியம்மன் கோயிலில் மட்டுமல்ல, இதே ஊரில் உள்ள கங்கை அம்மன், முத்துக்கிருஷ்ணாபுரம் முத்தாரம்மன், புளியம்பட்டி, அச்சன்புதூர், கோவில்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கோயில்களில் புகுந்து சாமி சிலைகளில் இருந்த தங்க நகைகளை மட்டும் திருடியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அவரிடம் இருந்து இதுவரை சுமார் 11 கிராம் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டிருக்கின்றன.

தொடர் விசாரணைக்குப் பிறகே அவர் எந்தெந்த கோயில்களில் எவ்வளவு நகை திருடியிருக்கிறார் என்பது தெரிய வரும் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com