காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (62). இவரது மகள் மணிமேகலை (30). சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில் குடிசை வீட்டில் வசித்து வந்த மணிமேகலையை கடந்த 9 ம் தேதி இரவு கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக தெரிய வருகிறது. இதையடுத்து அவரது பெற்றோர்கள் மணிமேகலையை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு மணிமேகலைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் குறித்து ஒரகடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.