பெரம்பலூர்: ’காலி பாட்டில் யார் கணக்கு?’ - கொதிக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்

டாஸ்மாக் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுயுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள்

பெரம்பலூர் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர், வடக்கு மாதவி சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலத்திற்கு முன்பு இன்று காலை டாஸ்மாக்கின் அனைத்து பணியாளர்கள் கூட்டுக்குழு சார்பில், காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.வி. ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் நிர்வாகம் மதுபான பாட்டில்களில் லேபிளை ஒட்டி விற்பனை செய்து, ரூ.10 கூடுதலாக வசூலித்து பயனாளி அப்பாட்டிலை கொடுத்தால், வசூலித்த ரூ.10-ஐ திருப்பி தருவது, லேபிள்களையும் காலி பாட்டில்களையும் கணக்கிட்டு, பாதுகாத்து ஒப்பந்ததாரரிடம் ஒப்படைப்பது என்ற புதிய பரீட்சார்த்த முறையை பெரம்பலூர் & அரியலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 01.04.2023 முதல் அமல்படுத்திட முடிவு செய்துள்ளது.

இதனை எதிர்த்து மாவட்ட கூட்டுக்குழு சார்பில், வாய்மொழியாகவும், கடிதம் மூலமும் பதில் தெரிவித்துப் பயனில்லை என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதற்கட்டமாக ஈடுபடுவதாகவும், காலி பாட்டில்களில் லேபிள் ஒட்டுவது, பாட்டிலை சேகரிப்பது கணக்கிடுவது எங்கள் வேலையல்ல என்றும், ஏற்கனவே மதுக்கடைகளில், மதுபாட்டில்கள், காலி அட்டைப் பெட்டிகளை வைக்க இடமில்லாத நிலையில், கூடுதலாக கடையில் காலி பாட்டிலை வைக்க இடம் போதாது என்றும், இதனால், பயனாளிகளுக்கும், பணியாளர்களுக்கும் இத்திட்டம் மோதலை உருவாக்கும் என்றும் காலிபாட்டிலால் பணியாளர்களுக்கு சுகாதார கேட்டினை ஏற்படும், நிர்ணயித்த நேரத்தை விட கூடுதலாக இரவு 10.00 மணி வரை வேலை செய்து விட்டு, கணக்கை முடிப்பதற்கு இரவு 12.00 மணி ஆகிறது.

இதில் பாட்டில் கணக்கை எந்த நேரத்தில், சரிபார்ப்பது, தற்காலிகம், கேசுவல் என்ற பெயரில் தொகுப்பூதியத்தில் 20 ஆண்டுகள் பணி செய்யும் தங்கள் மீது கூடுதலாக பணி சுமையை ஏற்றக்கூடாது, டாஸ்மாக் நிர்வாகம் இத்திட்டத்தை திரும்பபெற வேண்டும், இல்லை எனில் மாநில அளவிலான போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும், தொகுப்பூதியம் பெறும் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவை சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com