தஞ்சாவூர்: மதுகுடித்து 2 பேர் உயிரிழந்த டாஸ்மாக் பாரில் தடயவியல் துறை ஆய்வு

மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர்.
பாரில் தடயவியல் துறை ஆய்வு மேற்கொண்டபோது
பாரில் தடயவியல் துறை ஆய்வு மேற்கொண்டபோது

தஞ்சாவூர், டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில் விற்கப்பட்ட மதுவை வாங்கி கொடுத்த குடித்த இரண்டு பேர் உயிரிழந்த விவகாரத்தில் தடவியவில் நிபுணர்கள் மதுபான கடை மற்றும் பார்களில் சோதனை செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் 68 வயதான குப்புசாமி. மீன் வியாபாரியான இவர் நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் உள்ள பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்தியுள்ளார். சற்று நேரத்தில் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து சம்பந்தபட்ட டாஸ்மாக் கடை, பார் ஆகியவற்றை பூட்டி சீல் வைக்கப்பட்டது. சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது யாராவது கொலை செய்ய ம்யன்றனரா? என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட தடயவியல் துறை நிபுணர்கள் சென்றனர். அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் தங்க.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டன.

பின்னர் டாஸ்மாக் கடை மற்றும் பாருக்குள் சென்று தயடவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். மேலும் சயனைடு உள்ளதா ? எனவும் சோதனை செய்தனர். தொடர்ந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com