மதுரை, மத்திய சிறையில் தண்டனை சிறைவாசிகளாக உள்ள தனது தந்தை பெரிய கருப்பண் மற்றும் பெரியப்பா ஆகியோருக்கு பரோல் கிடைக்காத காரணத்தால் தனக்கு திருமணமே வேண்டாம் என்று காத்திருந்தார் சிறைவாசியின் மகளான ஹரிணி.
தமிழக சிறைத்துறை டி.ஜி.பி அமரேஷ் பூஜாரியின் மனிதாபிமான முயற்சியால் சிறப்பு பரோல் விடுப்பில் ஒரு மாதம் வெளியில் சென்று தனது மகளுக்கு திருமணத்தை நல்ல முறையில் முடித்து வைத்துள்ளார் அவரது தந்தை பெரிய கருப்பண்.
இதனையடுத்து மணமக்கள் ஹரிணிக்கும், சிவகணேசனுக்கும் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து மணமகள் ஹரிணி, ‘’எனது தந்தை சிறையில் இருந்ததால் திருமணத்திற்கான வேலைகள் தடைபட்டன. அதனால், அவருக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தந்தை இல்லாமல் எனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறி வந்தேன். இந்த குறித்து தமிழக சிறைத்துறை டி.ஜி.பி-யின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதன்பிறகு அவர் கருணை அடிப்படையில் ஒரு பெண் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்பதற்காக தகப்பன் ஸ்தானத்தில் இருந்து யோசித்து என் அப்பாவிற்கு சிறப்பு விடுப்பு கொடுத்தார். அதனால், தான் எனது தந்தை என் திருமணத்தில் கலந்து கொள்ள முடிந்தது. மனிதாபிமான அடிப்படையில் டி.ஜி.பி அவர்கள் சட்ட உதவிகள் செய்து கொடுத்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.