அமித்ஷா இடஒதுக்கீடு குறித்து பேச்சு: ‘இஸ்லாமியர்கள் மீதான வன்மம் வெளிப்படுகிறது’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
இஸ்லாமியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது போன்று உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
உங்களில் ஒருவன் நிகழ்ச்சி மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசியதாவது, இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது போன்றும் இந்து மக்களைத் திருப்திபடுத்தும் எனப் பா.ஜ.க தலைமை கருதுகிறது.
அவ்வாறு செய்வதன் மூலம் இந்துக்கள் மகிழ்வார்கள் எனப் பா.ஜ.க நினைக்கிறது. இந்தப் பேச்சு மூலம் சிறுபான்மை இன மக்களின் மீதான வன்மம் வெளிப்படுகிறது. தேர்தல் காரணங்களுக்காக அமித்ஷா பேசி உள்ளார்.
பா.ஜ.கவிற்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலோனோர் இந்துக்கள் தான். அப்படி இருக்கையில் பொய்களையும், வெறுப்பையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க சமூக வலைதளங்களை பா.ஜ.க பயன்படுத்தி வருகிறது.
மதச்சார்பின்மையை அரசியலமைப்பாகக் கொண்ட நாட்டில் மத்திய அமைச்சர் இப்படிப் பேசுவது அரசியலமைப்பை மீறுவது ஆகும்.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என்றும் அ.தி.மு.க-வின் ஊழல் ஆட்சியைப் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும்.உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என விளக்கம் அளித்தார்.