சுகாதாரமற்ற நிலையில் துணை சுகாதார நிலையம் - கிராம மக்கள் வேதனை

கழிவுநீர் செல்லும் பாதை இல்லாமல் கழிவுநீர் இங்கு குளம் போல் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கழிவுநீர் சூழ்ந்துள்ள துணை சுகாதார நிலையம்
கழிவுநீர் சூழ்ந்துள்ள துணை சுகாதார நிலையம்

பர்கூர் அருகே சுகாதாரமற்ற வளாகத்தில் இயங்கும் துணை சுகாதார நிலையம் தூய்மைப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஒப்பத்தவாடி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் அவசர மருத்துவ தேவைக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்கூர் அரசு பொதுமறை அணிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் அவசர தேவைக்கு இந்த துணை சுகாதார நிலையத்தையே கிராம மக்கள் நாடுகின்றனர்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு மற்றும் தடுப்பூசி போலியோ சொட்டு மருந்து போன்றவைகள் இந்த சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் சென்று பயன்பெற்று வரும் நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதார நிலையத்தில் முன்பு சென்ற கழிவுநீர் கால்வாயை சிலர் மூடியுள்ளனர். இதனால் கழிவுநீர் செல்ல பாதை இல்லாமல் இருந்து வருகிறது.

பின்னர் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டப்பட்டு கழிவுநீர் ஆனது சுகாதார நிலையத்தின் முன்பு குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவு நீரானது வெளியேறாமல் உள்ளதால் சுற்றுவட்டாரங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த கழிவு நீர்க்குச் செல்லும் கால்வாயை சிலர் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் கழிவுநீர் செல்லும் பாதை இல்லாமல் கழிவுநீர் இங்கு குளம் போல் தேங்கி உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வரும் நிலையில் துணை சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பொய்கை கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com