செல்போன் பேசுவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷமருத்தி தற்கொலை செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை, திருச்சுழி அருகே பச்சேரியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மகள் பிரியதர்ஷினி. திருச்சுழி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியை விட்டு வந்ததும் பிரிதர்ஷினி அடிக்கடி செல்போனை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதை அவரது தாயார் ராமலட்சுமி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இதனால், ராமலட்சுமிக்கும், பிரியதர்ஷினிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பிரிதயர்ஷினி செல்போனை நீண்ட நேரம் பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட தாயார் ராமலட்சுமி அவரை மீண்டும் கண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த பிரிதர்ஷினி வீட்டில் இருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். விஷம் அருந்தியதை அறிந்த அவரது பெற்றோர் மருதுபாண்டியும் ராமலட்சுமியும் பிரியதர்ஷிணியை அழைத்துச் சென்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிரிதர்ஷினி உயிழந்தார். இது குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.