கடலூர்: காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி - அதிர்ச்சி பின்னணி

காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுகன்யா
சுகன்யா

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சுகன்யா என்பவர் காவல் உதவி ஆய்வாளராக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல இன்று பணியில் இருந்தபோது திடீரென சுகன்யா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் அவரை தூக்கி தண்ணீர் கொடுத்து விசாரித்தபோது தூக்க மாத்திரை அதிகமாக விழுங்கி தற்கொலைக்கு முய்ன்றதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக எஸ்.ஐ சுகன்யாவை மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் ‘காவல் ஆய்வாளர் சுகன்யா தூக்க மாத்திரைகளை எதற்கு விழுங்கினார்?’ என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா விழுப்புரம் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா தூக்க மாத்திரைடை அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோதே பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரைகள் விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- பொய்யாமொழி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com