செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை: அவசர சிகிச்சை கூட பெற முடியாமல் அவதி

சுகாதாரத்துறை அமைச்சர் செங்கம் அரசு மருத்துவமனையை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் அரசு மருத்துவமனை
செங்கம் அரசு மருத்துவமனை

செங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நோயாளிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மருத்துவமனையில் குறைந்தபட்சம் 13 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய மருத்துவமனையில் தற்போது, 6 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவதால் அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் சுமார் 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திறக்கப்பட்ட நிலையில், போதுமான மருத்துவர்கள் இல்லாததால் இன்று பள்ளிக்கு சென்ற மாணவி விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு ஒரு மணிநேரமாக காத்திருந்தும் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாத அவதிக்குள்ளாகினர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் போதுமான மருத்துவர்கள் உள்ளதாக கூறிவரும் நிலையில், செங்கம் மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் செங்கம் அரசு மருத்துவமனையை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பாரா என செங்கம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com