பிரபல அசைவ உணவு ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட உணவில் புழு மற்றும் ஈ உள்ளிட்டவை கிடந்ததால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் இம்பீரியர் சாலையில் பிரபல அசைவ உணவகம் ஒன்று இயக்கி வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் குள்ளஞ்சாவடி பகுதியைச் சார்ந்தவர்களும், கடலூர் பகுதியைச் சார்ந்தவர்களும் மதியம் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
அப்போது, பிரியாணியில் புழு செத்து கிடந்துள்ளது. மற்றொருவர் சைவ உணவு வாங்கியுள்ளார். இதில், தயிர் வாங்கியபோது தயிரில் மீன் முள் இருந்துள்ளன.
இதைப்பார்த்த வாடிக்கையாளர்கள் உடனே உணவக மேலாளரிடம் காண்பித்து, நியாயம் கேட்டுள்ளனர். 'இது ஒன்றும் பெரியதில்லை இதை தூக்கி போட்டுவிட்டு நீங்கள் சாப்பிடுங்கள்" என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவை சாப்பிடாமலும் சாப்பிட்ட உணவினால் குமட்டல் வாந்தி வருவதாகவும் கூறி வெளியேறி விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி வாடிக்கையாளர்கள் 'ஃபுட் ஆபீஸரிடம் கூறுவோம்' என்று கூறியதற்கு 'நீங்கள் யார் கிட்ட வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளலாம் எங்களுக்கு ஒன்றும் பயம் இல்லை' என்றும் அலட்சியமாகவும் அதிகார தோரணையிலும் பதில் கூறியுள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்புதுறையும் சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று விசாரணை செய்து இதுபோன்ற தரமற்ற உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.