இரவில் மட்டும் இடுப்பை கிள்ளும் சைக்கோ..? -அலறும் ஒமலூர் பகுதி கிராம மக்கள்

நாங்களும் இடுப்பை கிள்ளுற சைக்கோவை தேடிகிட்டுதான் இருக்கோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் பணியில் கிராம மக்கள்
தேடுதல் பணியில் கிராம மக்கள்

இரவில் பெண்களில் இடுப்பை மட்டும் கிள்ளும் விநோத சைக்கோவின் செயல் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், ஒமலூரை அடுத்துள்ள சுற்றுவட்டார கிராம புற பகுதிகள் தும்பிபாடி,குருவரெட்டியூர், சின்ன நடுப்பட்டி ஆகிய கிராமங்களில்  1000 குடும்பங்களுக்கு மேலாக வசிக்கின்றன. தற்போது, உக்கிர காலம் என்பதால் வீட்டை திறந்துவைத்து, அல்லது மாட்டு கொட்டகை எனப்படும் தாவராத்தில் மக்கள் உறங்குவது வழக்கம். தற்போது ஒரு வார காலமாக  கிராம பெண்கள் படாதபாடு படுகிறார்கள். விசயம் இதுதான். வீடுகளில், மாட்டுகொட்டகையில் படுத்து உறங்கும் பெண்களின் பக்கத்தில் வந்து செக்ஸ் சில்மிஷ சைக்கோ படுத்துகொள்கிறனாம். சில்மிஷம் செய்து விட்டு ஒடுவிடுகிறனாம். குறிப்பிட்ட பகுதி பெண்கள் எல்லாம் தூக்கத்தை தொலைத்து துக்கத்தில் தவிக்கிறார்கள்.

கிராம மக்களிடம் பேசினோம். ' தற்போது உக்கிர காலம். வீட்டுக்கு வெளியில மக்கள் படுத்துகிறாஙக. வீட்டுல ஜன்னல் ஒரத்தில காத்து வரட்டுமுன்னு படுத்துகிறாஙக. சைக்கோ ஆசாமி வீடு திறந்திருந்த பெண்கள் பக்கத்தில வந்து படுத்துகிறான். ஜன்னல் ஒரமா படுத்திருந்தா இடுப்பை பிடிச்சி கிள்ளி சில்மிஷம் செஞ்சிட்டு ஒடுறானம். பக்கத்தில படுத்திட்டு சில்மிஷம் செஞ்சத பார்த்துட்டு பெண்கள் அலறி அடிச்சிகிட்டு ராத்திரியில வீல்ன்னு கத்தறாஙக. ஊரே பயத்தில கிடக்குது 9 டூ 12 மணிக்குள்ள மட்டும்தான் சைக்கோ இப்படி செய்யறான். எந்த பொருளயும் திருடறதும் இல்ல. ரெண்டு நாள ஊரு ஆளுங்க ஒதுக்குபுறமான ஏரிக்கரை, ஒதுக்கு புற கோயில்ன்னு ராத்திரியில தேடிபார்த்துட்டோம். எங்கேயும் கிடைக்கல. சைக்கோவை போலீஸ் கண்டுபிடிக்கனும் என்றார்கள்.

தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் குணசேகரிடம்  பேச அழைத்தோம்.பலனில்லை. காவல்நிலையத்தில் விசாரித்தோம். ' நாங்களும் இடுப்பை கிள்ளுற சைக்கோவை தேடிகிட்டுதான் இருக்கோம்.' என்றார்கள்.

சீக்கிரம் தேடி பிடிங்க சார்..!

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com