சிறுமிக்கு பாலியல் தொல்லை: 60 வயது முதியவர் மீது போக்சோ வழக்கு

நல்லம்பள்ளி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவர் கோவிந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை

தர்மபுரி அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று முன்தினம் பள்ளியில் இயற்கை உபாதைக்கு வெளியில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (60) அந்த சிறுமியை அழைத்து விளையாடுவது போல பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். தவறாக நடந்து கொண்ட முதியவரிடம் இருந்து சிறுமி தப்பித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து சிறுமி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் அது பற்றி கூறவே தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலைத்தில், சிறுமின் தாயார் புகார் அளித்துள்ளார். பிறகு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆறுதல் கூற வந்த பாஜகவினர்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆறுதல் கூற வந்த பாஜகவினர்

விசாரணையில் ஈடுபட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தலைமறைவான கோவிந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த முதியவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தசாமியின் மூத்த சகோதரர் வெள்யைன் (80) ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தான் சிறையில் இருந்து விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தர்மபுரி பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரன், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கே சென்று நேரில் ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தகுந்த நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உறுதிபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

- பொய்கை.கோ. கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com