தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க தரப்பு கொந்தளிப்பைக் காட்டி வருகிறது. அந்தவகையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை விமர்சித்து இருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ‘தரம்கெட்ட அண்ணாமலை’ என்று விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘பா.ஜ.க-வை பொறுத்தவரை மாநில தலைவர் பதவி என்பது ஒரு பொம்மையை போன்றது.
பொம்மையை எங்கு வேண்டும் என்றாலும் வைக்கலாம். கோமாளியாகவும் வைக்க முடியும். ஜெயலலிதாவை பழித்தவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம்’ என்றார்.