கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் பிபோர்ஜாய் புயல் காரணமாக கனமழை தொடங்கியுள்ளது.
ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பலத்த காற்றுவீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிகாலை திருவனந்தபுரத்தில் உள்ள திருவாடானை பொழியூரில் கடும் கடல் சீற்றத்தால் ஆறு வீடுகள் இடிந்து விழுந்தது.
நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இந்த பகுதியிலுள்ள 47 குடும்பங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
10 குடும்பம் நிவராண முகாமிலும் மற்ற 37 குடும்பம் உறவினர் வீடுகளுக்கு சென்றனர். அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும், தமிழகத்திற்கு செல்லும் கொல்லம் கோட்டில் இருந்து நீரோடி வரையிலான தார் சாலை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் முழுவதும் நீரில் மூழ்கியது.
தற்பொழுதும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.