விழுப்புரம் மாவட்டம் அங்கராயநல்லூரில் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி மீது பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செஞ்சிஅருகே உள்ள அங்கராயநால்லுர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மே -1 ம்தேதி செயல்படும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்திருந்தது. இது தொடர்பாக ‘இன்று வேலைநாள்’ என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தது.
இது தொடர்பாக பள்ளி மீது மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இருப்பினும் மாணவ- மானவிகள் பலரும் பள்ளிக்கு வந்தனர். இந்தத் தகவல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு தெரிய வந்ததால் பள்ளி திறந்த ஒரு மணி நேரத்தில் மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விடுமுறை தினத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காதது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.