முன்னாள் காதலியே வருக! வருக! 6 வருஷத்துக்கு முன்னாடி சாத்தபாடி, கூடமலை என்று ஊர் குறியீடுகளுடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு கெளசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் பிரிந்து சென்றதாகக் கூறப்படுகிறது. கெளசல்யா வேறு நபரை திருமணம் செய்து கொண்டு வெளியூரில் குழந்தைகளோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் கெளசல்யாவின் அண்ணனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. அதை பயன்படுத்தி கொண்ட மாரிமுத்து கெளசல்யா அண்ணனின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்வது போல் வாழ்த்தி முன்னாள் காதலியே வருக! வருக! 6 வருஷத்துக்கு முன்னாடி சாத்தபாடி, கூடமலை என்று ஊர் குறியீடுகளுடன் அவருடைய படத்தை அச்சடித்து ஆத்தூர் நகர் பகுதிகள் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.
இதையறிந்த கெளசல்யாஅதிர்ச்சியடைந்து ஆத்தூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சமபவம் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, " மாரிமுத்துவை கைது செய்துவிட்டோம். நண்பர்கள் கொடுத்த ஐடியாபடி அந்த பெண்ணை பழிவாங்க இப்படி செய்திருக்கிறான். போஸ்டர் அடித்த பிரிண்டிங் பிரஸின் உரிமையாளரை தேடிவருகிறோம்" என்றனர்.