சேலம் அம்மாபேட்டையில் அமைந்துள்ளது சக்தி கைலாஷ் கல்லூரி. இந்த கல்லூரியில் ரெண்டு மாசத்துக்கு முன்பு பிரகடிக்கல் தேர்வு நடந்திருக்கிறது. அதற்காக மொத்தமாக மாணவர்கள் பூட்டிய அறைக்குள் செல்போனை வைத்திருக்கின்றனர். தேர்வு எழுதி முடித்துவிட்டு திரும்பி வந்து பார்க்கையில் செல்போன் மாயமாகி போனது.
அதிர்ச்சியடைந்த மாணவர்கள நிர்வாகத்திடம் தெரிவிக்க எத்தனை செல்போன் என்று விசாரித்து,மொத்தம் 16 செல்போன் காணமால் போனதாக அம்மாபேட்டை போலீஸில் புகார் கொடுத்தார்கள்.
போலீஸ் விசாரணையை ஆரம்பித்து கல்லூரி சி.சி.டி.வி, யாரெல்லாம் காலேஜ் வந்து போனார்கள் என்று விசாரித்தார்கள். தேர்வு நடந்த நாள் கல்லூரி பேராசிரியர்களுக்கான இண்டர்வியூ நடந்திருக்கிறது. அந்த இண்டர்வியூக்கு வந்த அம்மாபேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் மொத்த செல்போனையும் திருடி சென்றுள்ளது கண்டுபிடித்து 16 செல்போனை மீட்டதுடன் ,அவரை ஜெயிலில் தள்ளியிருக்கிருக்கின்றனர்.
போலீஸாரிடம் பேசினோம். ”ரெண்டு காலேஜியில பேராசிரியர் வேலை பார்த்திருக்காரு.போதிய வருமானம் இல்லை. அதனால இந்த வேலை பார்த்து இருக்காரு. செபோன் சர்வீஸ் செய்யற கடை ஒன்னு வச்சிருக்காரு. அதனால இந்த திருட்டை பண்ணியிருக்காரு.” என்றார்கள்.