சேலத்தில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு 5 பேர் கொண்ட கும்பல், கடந்த ஏப்.25-ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்கள் சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், சம்பவம் குறித்து வெளியே சொன்னால், அவரது தந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதும் தெரியவந்ததுள்ளது.
இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வினித் (23), தேக்கம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (21), ஆகாஷ் (19), சீனிவாசன் ( 23), அருள்குமார் ( 23) ஆகியோரை கைது செய்தனர்.
சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டு பொது ஒழுங்கு பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டதால், காவல் துணை ஆணையர் கவுதம் கோயல் பரிந்துரையின் பேரிலும், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி உத்தரவின் பேரிலும், 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.