சேலம்: குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் - கள்ளக்காதலனுடன் தாய் கைது

தங்கி இருந்த குடிசையை விட்டு தப்பியோட தயாராக இருந்த போது இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கள்ளக்காதலுனுடன் தாய் கைது
கள்ளக்காதலுனுடன் தாய் கைது

கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போது இடையூறாக இருந்த குழந்தையை மிதித்துக்கொன்ற தாயை கள்ளக்காதலனுடன் போலீஸார் கைது செய்தனர்.

கோவை வடவள்ளியை சேர்ந்த பெண் கலைவாணி. கணவரை விட்டு பிரிந்த பெண் தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். பண்ணாரி கோயிலுக்கு கலைவாணி போனபோது, அதே கோயிலுக்கு போன தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மல்லேசுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

நாளடைவில் போன் மூலம் பேசி நெருக்கம் ஏற்பட்டு உல்லாசமாக பல்வேறு இடங்களில் சுற்றி இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து இருக்க முடிவு செய்து சில நாட்களுக்கு முன் சேலம் தாரமங்கலம் பக்கத்தில் உள்ள சிக்கம்பட்டி கிராமத்தில் செங்கல்சூளையில் வேலை கேட்டு உள்ளனர். அங்குள்ளவர்கள் பரிதாபப்பட்டு வேலை கொடுத்துள்ளார்கள்.

இரண்டு நாளைக்கு முன்பு இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தபோது குழந்தை அழுது இருக்கிறது. இதில் டென்ஷனான இருவரும் குழந்தையை அடித்து, நெஞ்சில் மிதித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

குழந்தையை வீறிட்டு அழும் சத்தம் கேட்க, அக்கம் பக்கம் இருந்தவர்கள் குடிசைக்குச் சென்று பார்த்த போது உடம்பு சரியில்லை என்று சொன்ன கலைவாணி சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்றுள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துவிட்டு ரெண்டு பேரும் எஸ்கேப் ஆகியுள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறக்க, போலீசுக்கு தகவல் சொல்லபட்டது. குடிசையில் இருந்து ஊருக்கு கிளம்ப ரெடியான கள்ளகாதல் ஜோடியை போலீஸ் கைது செய்தனர்.

குழந்தையைக் கொன்ற குற்ற உணர்வு இல்லமால், நின்ற தாய் கலைவாணி-யை தாரமங்கலம் பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து சென்றனர். இந்த கொலை வழக்கு குறித்து தொடர்ந்து இருவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com