சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதிகளில் சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி ஊரலிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மலை பகுதிகளில் தனிப்படை காவலர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அதன்படி வாழப்பாடி உட்கோட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியில் கும்பபாடி மலை கிராமத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கரி தலைமையிலான காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அடர்ந்த மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி ஊறலிட்டு மறைத்து வைத்திருந்ததை தேடி கண்டுபிடித்தனர்.
கள்ளச்சாராயம் தயார் செய்ய பயண்படுத்திய பொருட்களை சேதப்படுத்தியதோடு, 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை தரையில் ஊற்றி அழித்தனர்.
மேலும், கள்ளச்சாராயம் தீமை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை அப்பகுதி மக்களுக்கு வழங்கி, யாரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.