தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீடுகளில் கடந்த மே மாதம் முழுவதும் தொடர் திருட்டில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மேற்பார்வையில், உதவி காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து, குற்றவாளிபந்தநல்லூர் காவல் சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த சாயனாபுரம் குளத்தாங்கரைத் தெருவை சேர்ந்த ஆசைத்தம்பி (26) மற்றும் விக்னேஷ் (24) ஆகிய இருவர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இருவரும் பந்தநல்லூர் பகுதிகளில் வீட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
மேலும், பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர்.
மேலும், பந்தநல்லூர் போலீசார் ஆசைத்தம்பி மற்றும் விக்னேஷ் மீது வழக்கு பதிவு திருவிடைமருதூர்மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.