ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை நினைவுக்கூறும் வகையில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படத்தை சூரிய ஒலிக்கதிர் கொண்டு பூதக்கண்ணாடியால் மரப்பலகையில் குவித்து பர்னிங் வுட் ஆர்ட் படைத்து இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தோப்புத்தெருவை சேர்ந்த விக்னேஷ் தனது திறமைகளால் பல்வேறு ஓவியங்களை சூரிய ஒளிக்கதிர் கொண்டு பூதக்கண்ணாடியால் மரப்பலகில் குவித்து ஓவியம் வரைந்து வருகிறார். இந்த பர்னிங்ங் வுட் ஓவியம் இந்தியாவில் ஒரு சிலரால் மட்டும் வரையப்பட்டு வருகிறது.
தற்போது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வருவதையொட்டி மயிலாடுதுறை அடுத்து தரங்கம்பாடிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்ற விக்னேஷ் வெள்ளையர்களால் கட்டப்பட்ட டேனிஸ் கோட்டை முன்பு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில், சுதந்திரப் போராட்ட வீரரும், தேசபிதா மகாத்மா காந்தியின் திருவுருவ படத்தை தனது திறமைகளால் சூரிய ஒளிக்கதிர் கொண்டு வரைந்து அசத்தி வருகிறார் மயிலாடுதுறை சேர்ந்த விக்னேஷ்.
தற்போது அவர் வரைந்த ஓவியத்தை அவரே வீடியோ ஒளிப்பதிவு செய்து இணையதளம் மூலம் பதிவிட்டுள்ளார்.இந்த ஓவியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
ஆர்.விவேக் ஆனந்தன்