அதிமுக புகார் காரணமாக ஓபிஎஸ் தரப்பினர் வைத்த கொடிகள் அகற்றம்: புரட்சிப் பயணம் நிகழ்ச்சி நடைபெறுமா?

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் அணியினரால் வைக்கப்பட்ட அதிமுக கொடி போலிஸார் தலைமையில் அகற்றம்.
கொடி அகற்றம், தயார் நிலையில் தொடக்க விழா
கொடி அகற்றம், தயார் நிலையில் தொடக்க விழா

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் காஞ்சிபுரம் அருகே களியனூர் பகுதியில் இன்று மாலை புரட்சிப் பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புரட்சி பயணத்தை தொடங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்தை ஒட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை களியனுர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கொடிகளும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் உள்ள புரட்சி பயணம் தொடக்க விழா
தயார் நிலையில் உள்ள புரட்சி பயணம் தொடக்க விழா

இந்நிலையில் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முற்றிலும் நிறைவடைந்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி.டாக்டர் எம்.சுதாகர் அவர்களை நேரில் சந்தித்து, ஓபிஎஸ் அணியினர் அதிமுக கட்சியையும், கொடியையும், பேனர்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரி புகார் மனுவை அளித்து உள்ளனர்.

புகார் அளித்த இபிஎஸ் அணியினர்
புகார் அளித்த இபிஎஸ் அணியினர்

அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில், தமிழக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி கே.பழனிச்சாமியை உயர் நீதிமன்றமும், தலைமை தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என்றும் கட்சியின் பொதுக்குழு முடிவே இறுதியானது என்றும், ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அதனை மெய்ப்பிக்கும் வகையில் வீடியோ காட்சிகளுடன் மீண்டும் புகார் மனு அளித்துள்ளோம் எனவும், அதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸ் அகற்றிய அதிமுக கொடி
போலீஸ் அகற்றிய அதிமுக கொடி

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் ஓபிஎஸ் அணியினரால் வைக்கபட்டிருந்த அதிமுக கட்சிக் கொடிகளை ஊழியர்களை கொண்டு போலீசார் அதிரடியாக அகற்றி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் அளித்த புகாரின் பேரிலேயே தற்போது அதிமுக கட்சிக் கொடிகளை போலீசார் அகற்றி வருகின்றனர். இதேபோல் ஓபிஎஸ் அணியினர் வைத்த பேனர்களும் போலீசாரால் அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கொடி அகற்றம்
அதிமுக கொடி அகற்றம்

இன்று மாலை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் புரட்சி பயணம் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புரட்சி பயணத்தை துவங்க உள்ள நிலையில் தற்போது ஓ.பி.எஸ் அணியினர் வைத்த அதிமுக கட்சிக் கொடிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் அணியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com