கடலூர்: மனைவியை லாட்ஜில் விட்டுவிட்டு கணவன் 2வது திருமணம் - அதிர்ச்சி பின்னணி

கடலூரில் குலதெய்வ கோயிலில் தாலி கட்டி மனைவியை லாட்ஜில் விட்டுவிட்டு கணவன் 2வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2வது திருமணம் செய்த இளைஞர்
2வது திருமணம் செய்த இளைஞர்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் (31). மெக்கானிக். இவர், எல்.என்.புரம் பகுதியை சேர்ந்த ரம்யா (29) என்பவரை கடந்த 10 ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.

மேலும் இருவரும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதில் ரம்யா கர்ப்பம் அடைந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்தால் திருமணம் செய்வதாக சுப்ரமணியன் சம்மதித்துள்ளார்.

அதன்படி ரம்யா செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள குலதெய்வக் கோவிலில் வைத்து, ரம்யாவை சுப்ரமணியன் திருமணம் செய்துள்ளார்.

இதன் பிறகு விழுப்புரத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் சுப்ரமணியனுக்கு கடலூரை சேர்ந்த வேறு பெண்ணுடன் திடீரென நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதனை அறிந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை தேடி வந்த நிலையில் திருமணத்தை உடனே தடுத்து நிறுத்தக் கோரி பண்ருட்டியில் இரவு முழுக்க கணவன் வீட்டு முன் வாசலில் அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் மாப்பிள்ளை சுப்பிரமணியனை திருவந்திபுரம் கோயிலில் தேடி வந்தனர்.

ஆனால் திருவந்திபுரத்தில் இன்று 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரே நேரத்தில் நடந்ததால் ஒவ்வொரு திருமண மேடையாக சென்று சுப்ரமணியனை தேடினர்.

இதனால் தாமதமான நிலையில், சுப்ரமணியனுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மணக்கோலத்தில் கோவிலில் இருந்து வெளியே வந்த சுப்பிரமணியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதன் பிறகு அவரை பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com