கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, அதே ஊரில் மற்றொரு வீதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
பாட்டி வீட்டின் அருகில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (30). திருமணமாகி இரட்டை பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர் பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமியை அடிக்கடி அழைத்து ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். கர்ப்பமானது தெரியாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
அங்கு, பரிசோதித்த டாக்டர் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பெற்றோர் தங்களது மகளிடம் விசாரித்தனர். இதன் பின்னர், சிறுமி கொடுத்த தகவலின்படி பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.