பட்டப்பகலில் பாலியல் தொழில் - முக்கிய கும்பலை அமுக்கிய போலீசார் - சிக்கியது எப்படி?

இந்த வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் மட்டும் வந்து போனதால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
போலீசாரிடம் சிக்கிய கும்பல்
போலீசாரிடம் சிக்கிய கும்பல்

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் கிராமத்தில் பாலியல் தொழில் ஈடுபட்ட ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்கள் என 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஆனந்தனின் மனைவி பாக்கியலட்சுமிகத்கு பாச்சல் என்ற கிராமத்தில் வீடு உள்ளது. இந்த வீட்டை ரேவதி என்பவர் வாட்கைக்கு கேட்டுள்ளார்.

மேலும், தான் தனியாக வசித்து வருவதாகவும், அவ்வப்போது மட்டுமே உறவினர்கள் வந்து செல்வார்கள் என்றும் வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், பெரிய அளவில் வாடகை கொடுக்க முடியாது. தற்போது வேலை இல்லை. இதை நம்பி, ரேவதிக்கு தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த நிலையில் ரேவதி மற்றும் அவருடைய கூட்டாளியான ராகுல் ஆகிய இருவரும் சேர்ந்து வெளி மாநிலம் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.

இந்த வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் மட்டும் வந்து போனதால், அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் அனைவரும் தங்களது உறவினர் என பொய் சொல்லி சமாளித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசிக்கு பாச்சல் கிராமத்தில் பாலியல் தொழில் நடப்பதாக சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட கர்நாடக மாநில பகுதியைச் சேர்ந்த முனியம்மாள், மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேனகா திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிஷா, ஃபர்தானா, மற்றும் தீபக், ஆகியோர் ஈடுபட்டதை கண்டறிந்து உறுதி செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தியதை அடுத்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பட்டப்பகலில் பாலியல் தொழில் நடத்தி வந்து கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com