காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விநாயகா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாதவாரத்தைச் சேர்ந்த கெவின் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென தீ மளமளவென பிடித்து வானுயிர கரும்புகையுடன் பலமாக எரிய தொடங்கியது.
உடனே ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். மேலும் அருகில் வீடுகள் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலை நிலவியது.
மேலும் இந்ததீ விபத்து மின் கசிவு காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக நடந்துள்ளதா என ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.