சொந்தகார பெண்கள் படத்தை ஆபாசமாக முகநூலில் பதிவேற்றிய இளைஞர் -அதிர்ச்சி பின்னணி

முகநூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்கள் மனைவிகள் ஆபாசமாக புகைப்படம் அனுப்பியது போலவும் பேசியது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்ததால், இளைஞர்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்
கைது செய்யப்பட்ட இளைஞர்

குமாரப்பாளையம் அருகே சொந்தகார பெண்களின் படத்தை ஆபாசமாக முகநூலில் பதிவேற்றிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வி.மேட்டூர். இந்த ஊரில் உள்ள பெண்கள் சிலரின் புகைப்படங்கள் கூடிய முகநூல் மற்றும் ட்விட்டர் அக்கவுண்டுகள் துவங்கப்பட்டு இருந்தது. அந்த கணக்குகளில் ஆபாசமான வார்த்தைகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலும் உள்ளூர் இளைஞர்களின் செல்போனுக்கு வந்த இந்த முகநூல் பக்கத்தை கண்டு இளைஞர்கள் கொந்தளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது .

காரணம் தங்கள் மனைவிகளின் புகைப்படங்களை கொண்டு முகநூலில் துவங்கப்பட்ட கணக்குகளை கண்டு அச்சமடைந்தனர்.

மேலும் அந்த முகநூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்கள் மனைவிகள் ஆபாசமாக புகைப்படம் அனுப்பியது போலவும் பேசியது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்ததால் இளைஞர்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசன் இதுபோன்று போலியான முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளை துவங்கி ஆபாசமாக பெண்களை சித்தரித்தும்,ஆபாச வார்த்தைகளை பதிவு செய்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த இளைஞரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த சூழ்நிலையில் காவல் நிலையம் முன்பு திரண்ட வி.மேட்டுரை சேர்ந்த பெண்களும், ஆண்களும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் கைது செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்து உடன்பாடு எட்டாததால், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூத்த வழக்கறிஞர் பா.பா. மோகன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு அந்த இளைஞர் மீது போக்சோ சட்டம் பாயும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனை அடுத்து பெண்கள் பெயரில் போலியாக முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திய இளைஞரை கைது செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து, பின்பு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணியிடம் பேசினோம். ' சொந்தகார பெண்களின் வாட்ஸ் அஃப் புரைபைலை பயன்படுத்தி, படத்தை டவுன்லோடு செஞ்சி, அந்த படத்தை வச்சி பெண்கள் பேரில கணக்கு துவங்கி இருக்கார். உள்ளூர்ல குழப்பத்தை விளைவிச்சி இருக்கார். இவரே அந்த முகநூல் கணக்க ஆபரேட் செஞ்சி செட் பண்ணியிருக்கார். இது கூட பிரச்சினையானது மூனு மாசத்துக்கு முன்னாடி. இப்ப புகார் கொடுத்தால நாம நடவடுக்கை எடுத்திருக்கோம். இப்ப மாட்டிகிட்டார்.' என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com