தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதில், 50,000 வாழை மரங்கள் சேதமடைந்தது.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் நேற்று மாலை அடித்த பலத்த சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
சூறாவளி காற்றால் லட்சுமிபுரம் பகுதியில் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால், தேனி - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
லட்சுமிபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சூறாவளி காற்று அந்த வாழை விவசாயத்தை முற்றிலும் புரட்டி போட்டது.
லட்சுமிபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை முழுவதுமாக முறிந்து சேதம் அடைந்துள்ளது.
சூறாவளி காற்றால் சேதம் அடைந்த வாழை 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான 50,000-த்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.