சாத்தான்குளத்தில் மழை வேண்டி வீடு வீடாக மடிப்பிச்சை எடுத்த மக்கள்

வீடுகளில் சேகரித்த உணவுகள் அனைத்தையும் ஒரு அண்டாவில் போட்டு மொத்தமாக கிண்டி சாப்பிட்டனர்
வீடு, வீடாக உணவு சேகரித்த மக்கள்
வீடு, வீடாக உணவு சேகரித்த மக்கள்

மழை பெய்ய வேண்டும் என்பதற்காக வீடு, வீடாக உணவு சேகரித்து ஒன்றாக சாப்பிட்டு பிரார்த்தனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்கள் சாத்தான்குளம் மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பொய்யாததால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே குடிக்க கூட தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வறட்சியை போக்க அதிகாரிகளுக்கு மனு கொடுத்து ஓய்ந்து போன மக்கள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ய தொடங்கிவிட்டனர்.

சாத்தான்குளம் கிருஷ்ணர் கோவில் தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வீடு வீடாகச்சென்று உணவு சேகரித்து ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பிரார்த்தனை செய்ய முடிவு செய்தனர்.அதன்படி ஒன்று கூடிய மக்கள் "நெல்லு விளையட்டும். புல்லு விளையட்டும்" என பாடல்கள் பாடியபடி வீடு வீடாகச் சென்று மடிப் பிச்சையாக உணவு சேகரித்தனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவில் முன்பு வீடுகளில் சேகரித்த உணவுகள் அனைத்தையும் ஒரு அண்டாவில் போட்டு மொத்தமாக கிண்டி சாப்பிட்டனர்.அதை அனைவரும் வயிறார சாப்பிட்டு இறைவனை வேண்டினர்.

சாத்தான்குளம் பகுதி மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வரும் நிலையில் மழை பெய்ய வேண்டி வீடு, வீடாக சென்று மடிப் பிச்சை எடுத்து அதை உண்டு பிரார்த்தனை செய்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com