அரசு பஸ்சில் மழைநீரால் நனைந்தபடி பயணம்- குடைபிடித்தப்படி செல்லும் அவலநிலை

சில பயணிகள் வீடியோவாக பதிவு செய்து குமரி மாவட்ட அரசு பேருந்துகளின் அவலம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்
மழைநீர் ஒழுகும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள்
மழைநீர் ஒழுகும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள்

குமரி மாவட்ட அரசு பேருந்தில் சென்ற பயணம் செய்த பயணிகள் மழைநீரில் நனைந்தபடியும், குடைபிடித்தப்படியும் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் ஓட்டை உடைசல்களுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மழை காலங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த வேளையில் கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளைக்கு வந்த அரசு பேருந்து ஒன்றில் மழைநீர் ஒழுகி பயணிகள் அனைவரும் மழையில் நனைந்தபடியும், குடைகள் பிடித்தபடியும் பயணம் செய்தனர்.

இதனை ஒரு சில பயணிகள் வீடியோவாக பதிவு செய்து குமரி மாவட்ட அரசு பேருந்துகளின் அவலம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது வைரலாகி பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com