சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுவாதி. தம்பதியின் மகன் சித்தார்த். கார்த்திக் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு காரில் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
விளாத்திகுளம் அருகே கீழேஈரால் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி அங்கும் இங்குமாக தறிகெட்டு ஓடியுள்ளது. இதன் பிறகு, சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் கார் சுக்குநூறாக சிதறியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து விபத்து நடந்த இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மற்றும் சுவாதி, சித்தார்த் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தாய், மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்துடன் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- கோபிகா ஸ்ரீ