தங்கள் நிலத்தை பாமக பிரமுகர் அபகரித்துவிட்டதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த அத்தி முட்லு போயர் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி மற்றும் அவரது மகள் விமலி சூர்யா. இருவரும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்றனர். பாதுகாப்புக்காக இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.பின்னர் சிவகாமி பேசுகையில், ‘கடன் சுமை மற்றும் பேரன்களின் படிப்பிற்காக இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை விற்க முடிவு செய்தோம்.கோவிந்தசாமி என்கின்ற பாமக பிரமுகர் மற்றும் மாதுராஜ் என்ற அதிமுக பிரமுகர் நிலத்தை கேட்டனர்.கோவிந்தசாமி ஏற்கனவே மாடு வாங்கி விவகாரத்தில் ஏமாற்றியதால் அவருக்கு நிலத்தை தர மறுத்து மரக்கடை கோவிந்தன் என்பவருக்கு விற்க முடிவு செய்து 5 லட்ச ரூபாய் முன் பணம் பெற்றுக்கொண்டு மூன்று மாதம் அக்ரீமெண்ட் போட்டுள்ளனர்.
ஒரு வாரம் வாய்தா கிரயம் செய்து கொள்கிறோம் எனக்கூறி மூன்று மாதம் முடிந்து விட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் பயனில்லை.
இந்நிலையில் பாமக பிரமுகா் கோவிந்தசாமி கோவிந்தன் என்பவரிடம் இருந்து பவா் பெற்று நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், அதிமுக பிரமுகர் மாதுராஜ் ஆகியோர் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுவதாகவும், தங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும் என மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும். பலமுறை காவல்துறை காவல் நிலையத்தில் அவர்களுக்கு பணத்தை செலுத்தி விட்டு நிலத்தை கிரயம் செய்து கொள்ள அறிவுறுத்தியும், அவர்கள் நிலத்தை கிரயம் செய்யாமலும், தாங்கள் நிலத்தை இதுவரை இரண்டு போகம் விவசாயம் செய்து வருவதாகவும், தங்களுக்கு இருக்க இடமும் இல்லை உணவுக்கு கூட கஷ்டப்படுவதாக’ வேதனையுடன் தெரிவித்தார் .
-பொய்கை கோ.கிருஷ்ணா