'திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது' - சீமான் ஓப்பன் டாக்

தமிழக ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவருமே அரசியல் பேசவேண்டும்
சீமான்
சீமான்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவே விரும்புகின்றோம். ஆனால், சிலர் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்யலாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளியளித்தார். அப்போது, நடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி தயாராகவே உள்ளது.

எங்களுக்கு என்று சில கொள்கைகள் உண்டு. அந்த வகையில், திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசி முடிவு செய்யலாம்.

இந்திய மீனவர்கள், வெளிநாடுகளில் கைது செய்யப்படுவதும், அவர்கள் சிறை வைக்கப்பட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் பலர் விடுதலை செய்யப்படவில்லை. இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள மீனவர்களை இந்திய அரசு மீட்டு தமிழகம் கொண்டு வரவேண்டும்.

நமது நாட்டில் யார் வேண்டும் என்றாலும் அரசியல் பேசலாம். யாரும் அரசியல் பேசக்கூடாது என்பது எல்லாம் இல்லை. தமிழக ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவருமே அரசியல் பேசவேண்டும்.

அப்போதுதான் ஒரு புரிதல் வரும். அனைவருக்கும் அரசியல் தெரியவேண்டும். அப்போதுதான் அரசியல் புனிதமடையும். தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணாமலை பேசவேண்டியதெல்லம் ஆளுநர் ரவி பேசி விடுவதால் அண்ணாமலைக்கு கோபம், குழப்பம். அதுக்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

பொது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரநிதிநிதியான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது. இது போன்ற நிலைமை தொடர்ந்தால் பழிவாங்கும் சம்பவம்தான் அதிகரிக்கும்.

இதனால், ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இப்படி செய்வதன் மூலம் பா.ஜ.கவுக்கு மட்டுமே லாபம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். அந்த பயம் எங்களுக்கு இல்லை. ஏன் என்றால், எங்கள் பாதை வேறு என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com