நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இம்ரான்கான் என்பவர் தனது மனைவி ஹசீனாவை தர்ஹாவிற்கு அழைத்துச் சென்று பிரேயர் செய்யும் போது கத்தியால் குத்திப்படுகொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்திருக்கிறார். தவறு செய்பவர்களை இறைவன் முன்னால் பலியிடுவது போன்றது இந்தச் சம்பவம் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இம்ரான்கான் என்பவர் தனது மனைவி ஹசீனாவை தர்ஹாவிற்கு அழைத்துச் சென்று பிரேயர் செய்யும் போது கத்தியால் குத்திப் படுகொலை செய்து விட்டு போலீசில் சரணடைந்திருக்கிறார்.
மனைவியின் நடத்தை சரியில்லாததால் அவரை கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் இது குறித்து நம்மிடம் பேசுகையில், 'எல்லா மதத்திலும் கணவன் - மனைவி பிரச்சினை இருக்கும், இதனால் பல கொலைகளும் நடைபெற்றிருக்கிறது.
ஆனால், மேலப்பாளையம் இம்ரான்கான் தனது மனைவியை குடும்ப பிரச்சினையினால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்தார் என்று கூற முடியவில்லை. கொலை நடந்த விதம் அப்படி.
கொலையாளி தனது மனைவி வீட்டிற்குச் சென்று சமரசமாய் பேசி, பைக்கில் மூன்று கி.மீட்டர் தூரம் கூட்டிச் சென்று தர்ஹாவில் தொழுகை நடத்தும் இடத்தில் கொலை செய்திருக்கிறார். தவறு செய்பவர்களை இறைவன் முன்னால் பலியிடுவது போன்றது இந்தச் சம்பவம் உள்ளது.
இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவர் செய்யும் தவறுக்கு மரண தண்டனை விதிப்பது ஷரியத் சட்டம். ஆப்கான் போன்ற நாடுகளில் ஷரியத் சட்டப்படி மரண தண்டனை சகஜம்.
ஆனால், இந்திய தண்டனை சட்டம் நடைமுறையில் உள்ள இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் ஷரியத் சட்டம் மறைமுகமாய் அறிமுகமாகிறதா? என்பதை காவல் துறை விசாரிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தில் நடத்தை சரியில்லாத பெண்ணை கொலை செய்த கொலையாளிகள் இஸ்லாம் மதச்சட்டப்படி பெண்ணை கொலை செய்ததாக கூறினார்கள். எனவே, ஹசீனா கொலை வழக்கையும் அந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும்' என்றார்.
இது குறித்து மேலப்பாளையம் போலீசிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், 'ஷரியத் சட்டமெல்லாம் ஒன்றும் இல்லை, கடந்த 6 மாத காலமாய் அப்பெண் பக்கத்து வீட்டு வாலிபருடன் நெருங்கி பழகியிருக்கிறார். இதை இம்ரான்கான் கண்டித்திருக்கிறார், அவர் கேட்கவில்லை, இதனால், போட்டுத்தள்ளி விட்டார்' என்றார்கள்.