இந்து மதத்தில் உள்ளவர்களை வேற்று மதத்திற்கு அனுப்பும் முயற்சியை தமிழக அரசு முறையாகச் செய்து வருகிறது என இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட இந்து முன்னணி அலுவலகத் திறப்பு விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், ”தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைத் தமிழக அரசு தடை செய்தது கண்டனத்திற்குறியது.
இந்து சாமியார்கள் குறித்துப் பேசினால் கருத்துச் சுதந்திரம் எனத் திரைத்துறையினர் கூக்குரலிடுகின்றனர்.ஆனால் கேரளாவில் நடந்த உணமை சம்பவத்தை நீதிமன்ற தீர்ப்பை மையமாக வைத்து எடுத்த திரைபடத்தைத் தமிழகத்தில் தடை செய்துள்ளது கண்டிக்கதக்கது.
தமிழகத்தில் உளவுத்துறை உயரதிகாரி மத ரீதியலாகச் செயல்படுகிறார்.மதமாற்றம் முயற்சி குறித்துப் புகார் அளித்தால் எந்த நடவடிக்கைகளும் காவல் நிலையத்தில் எடுப்பதில்லை. வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவதில்லை.தமிழக அரசு இந்து மாதத்தில் உள்ளவர்களை வேற்று மதத்திற்கு அனுப்புவதற்கு முறையாகச் செயல்படுகிறது.
’தி கேரளா ஸ்டோரி’ திரைபடத்தைத் தமிழகத்தில் திரையிட அனுமதி அளிக்கவில்லை என்றால் இந்து முன்னணி ஓ.டி.டி-யில் திரையிடும்” என்றார்.