நெல்லை: டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள் - சித்த மருத்துவக் கல்லூரி அசத்தல் திட்டம்

நெல்லையில் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் சித்த மருத்துவக்கல்லூரி களம் இறங்கி உள்ளது.
நெல்லை: டிஜிட்டல் மயமாகும் ஓலைச்சுவடிகள் - சித்த மருத்துவக் கல்லூரி அசத்தல் திட்டம்

நெல்லையில் சித்த மருத்துவக்கல்லூரி ஒன்று ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது.

சித்த மருத்துவம் மிகவும் புகழ்பெற்றது. டெங்கு, சிக்கன்குனியா, கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அல்லோப்பதியை விட சித்த மருத்துவம்தான் விஞ்சி நின்றது. அந்தக் கால சித்தர்கள் சித்த மருத்துவ குறிப்புகளை ஓலைச்சுவடியில் குறித்து வைத்திருந்தார்கள். போகி போன்ற பண்டிகையின் போது அந்த ஓலைச்சுவடிகளை மக்கள் எரித்து விட்டதால் பல மருத்துவ குறிப்புகள் நம்மிடம் இல்லை. எனவே மக்களிடம் இருக்கும் ஓலைச்சுவடிகளை வாங்கி அதை டிஜிட்டல் மயமாக்கி விட்டு அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் திட்டம் ஒன்றை நெல்லை சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கியிருக்கிறது. இதன் தலைவராய் பேராசிரியர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் இருக்கிறார்.

இது குறித்து டாக்டர் சுபாஷ் சந்திர போஸ் நம்மிடம் கூறுகையில், ”நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியும், தமிழ்நாடு தொல்லியல் சார்ந்த ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு குழுமமும் இணைந்து ஓலைச்சுவடிகளை பாதுகாக்க புது முயற்சியை எடுத்து வருகிறோம். ஓலைச்சுவடிகளில் பல வகை உண்டு. ஜோதிடம், மாந்திரீகம், கிராம தேவதைகள் கதை, சுடலை, இசக்கி வரலாறு, ராமாயாணம், மகாபாரதம்,தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துக்கள், யானை வைத்தியம், கணிதக் குறிப்பு போன்றவற்றை நம் முன்னோர் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான ஓலைச்சுவடிகள் சித்த மருத்துவ குறிப்புகளை அடக்கியது ஆகும். காய்ச்சல் பற்றி பல சுவடிகள் உள்ளன.

27 நட்சத்திரங்களில் என்னென்ன நட்சத்திரக்காரர்களுக்கு காய்ச்சல் மருந்து என்று கூட எழுதப்பட்டிருக்கிறது. எனவே ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்திருப்பவர்கள் சித்த மருத்துவக்க்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனி அரங்கத்திற்கு கொண்டு வரலாம். அதனை நாங்கள் ஆவணப்படுத்துகிறோம்.

பின்னர் அவை கெட்டுப் போகாமல் இருக்க நவீன தைலம் தடவி மேம்படுத்தி உரியவர்களிடையே ஒப்படைத்து விடுகிறோம். தவிர, ஓலைச்சுவடியில் உள்ள விபரங்கள் டிஜிட்டல் மயமாக்கபப்ட்டு அதை சி.டியாக்கி சம்ந்தப்பட்டவர்களிடம் ஒப்படைப்போம்”என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com