’உதயநிதி கண்கலங்கியது; அவரது இளகிய மனதை காட்டுகிறது’- அமைச்சர் சேகர்பாபு

செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜாக்கள் அல்ல
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
அமைச்சர் பி.கே.சேகர்பாபு

எடப்பாடி பழனிசாமிக்கு ’புரட்சித்தமிழர்’ பட்டம் அளித்தது புலியை பார்த்து பூனைகள் சூடு போட்டு கொள்வது போல உள்ளது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம் அனைத்து உப சன்னதிகள் மற்றும் பிரகாரங்கள் கருங்கல் திருப்பணி தொடக்க விழா சென்னை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.கே.சேகர் பாபு, "வயது முதிர்ந்தவர்களுக்கு கருணை காப்பகங்கள் மூன்று திருக்கோயில்கள் சார்பில் உண்டு உறைவிட பள்ளிகளாக மூத்த குடிமக்களுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் உண்டு உறைவிட பள்ளிகள் ஏற்படுத்த உள்ளோம்.

இந்து சமய அறநிலைத்துறையில் திருப்பணிகள் ஒரு புறமும், மூத்தவர்களை காக்கும் பணி மறுபுறமும் கலாச்சார பணிகளை பாதுகாக்கும் பணியில் ரூ.1400 கோடி செலவில் 23 பணிகள் நிறைவேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பிரிவாக தான் திருவேற்காடு கோவிலில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை தொடங்கி வைத்துள்ளோம் என கூறினார். மேலும் நீட் தேர்வு விலக்கு உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கண் கலங்கியது. அவரது இளகிய மனதை காட்டுகிறது. நீட் தேர்வு மசாதாவை நிறைவேற்றி தர வேண்டும் என வலி ஒரு புறமும், மறுபுறம் உறுதியோடு இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நேற்று அ.தி.மு.க மாநாட்டில் பேசினார்கள். கூடினார்கள். கலைந்தார்கள். அதோடு முடிந்து விட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு ’புரட்சித்தமிழர்’ பட்டம் அளித்தது குறித்து புலியை பார்த்து பூனைகள் சூடு போட்டு கொள்வது போல செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜாக்கள் அல்ல என கூறினார். பட்டங்கள் தேடி வர வேண்டும் பட்டங்களை தேடி நாம் செல்வது அழகல்ல என பேசினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com