காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக ( வரி வசூலிப்பு அலுவலர்) பணிபுரிந்து வருபவர் ரேணுகா. மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவர் தனக்கு சொந்தமான 460 சதர அடி இடத்தை தனது மகன்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்திருந்தார்.
பில் கலெக்டர் ரேணுகா பெயர் மாற்றம் செய்ய சுந்தரிடம் 15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ள நிலையில், லஞ்சம் கொடுக்க மனமில்லாத சுந்தர் இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆலடி தோப்புத் தெரு பகுதியில் கணக்கெடுப்பு பகுதியில் ஈடுபட்டிருந்த ரேணுகாவிடம் லஞ்ச பணம் ரூ.10 ஆயிரம் அளிக்கும் போது அங்கு மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேணுகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அதனையடுத்து கைது செய்யப்பட்ட பில் கலெக்டர் ரேணுகாவை காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.