நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த12ம் வகுப்பு திருநங்கை மாணவி ஸ்ரேயா 337மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 378பேர் தேர்வு எழுதிய நிலையில் 356பேர் தேர்ச்சி பெற்று 94சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் 20வயது திருநங்கை ஸ்ரேயா 11ம் வகுப்பு முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் 62, ஆங்கிலம்:56, பொருளியல்:48, வணிகவியல்:54, கணக்குப் பதிவியல் :58, கணினியில்: 59 என மொத்தம் 337மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள், மாணவிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை மாணவி ஷ்ரேயா, ‘’எனது தாய் வளர்பில் வளர்ந்து வருகிறேன். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற பள்ளி தலைமை ஆசிரியர் சக ஆசிரியர்கள் மற்றும் தாயின் அரவணைப்பு காரணமாக 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உயர் கல்வியை தொடர் முடிந்தது. என்னை என் அப்பாவும், அம்மாவும் ஏற்றுக்கொண்டார்கள்.
அரசு தனக்கு உதவி செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும் என மாணவி ஸ்ரேயா நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து தன்னைப் போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தி வாழ்வின் மேன்மை பெற வேண்டும்’’என திருநங்கை ஸ்ரேயா அறிவுறுத்தினார்.