நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி பட்டதாரி இளம் பெண் நித்யா ஆடு மேய்க்க சென்ற போது அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரியும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் காரணமாக இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புகள் அதற்கு பயன்படக்கூடிய டிராக்டர்கள், வீடுகள், வாகனங்களும் தீ வைப்பதும், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களில் தீ வைத்து பெட்ரோல் குண்டு வீசி வருவதும், ஆலை கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது பெட்ரோல் மற்றும் மண்ணெண்னை குண்டு வீசுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனத்துக்கு தீவைத்ததில் ஒரு வாகனம் எரிந்து சேதமானது.
ஜேடர்பாளையம் பகுதியில் தீ வைப்பது பெட்ரோல் மற்றும் மண்ணெணை குண்டு வீசும் கலாச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக ஜேடர்பாளையம் அருகே உள்ள பள்ளாபாளையத்தில் உள்ள 88 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை ஒருவர் குத்தகைக்கு எடுத்து சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார். தற்பொழுது மீன்பிடிக்க இருந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரி தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்ததால் ஏரி தண்ணீரில் இருந்த ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்தன.
இச்சம்பவங்கள் குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் என்கிற முத்துசாமி என்பவரது ஆலைக் கொட்டகையில் வேலை செய்து வந்த வட மாநில இளைஞர்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு அமைக்கப்பட்டுள்ள அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு பின்புறமாக வந்த மர்ம நபர்கள் அங்குள்ள ஒரு அறையின் ஓரத்தில் தடுக்கப்பட்டிருந்த அட்டையை உடைத்து அந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் மீது பெட்ரோலை வீசி ஊற்றி தீ வைத்தனர். தீ வைத்ததில் வட மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம் ஆகிய இண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் ஸ்வந்த், கோகுல் ஆகியோர் படுகாயத்துடனும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராகேஷ் என்பவர் 2 நாள்களுக்கு முன் இறந்து விட்டார். வட மாநில தொழிலாளர்கள் தாக்கபட்ட உடனே 650 போலீஸ்சார் அந்த பகுதிகள் முழுவதும் குவிக்கபட்டனர் . அப்படி பாதுகாப்பு இருந்தும் நேற்று சரளைமேட்டை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இருந்த 450 வாழை மரங்கள் வெட்டி சாய்த்துள்ளனர் மர்ம நபர்கள். வாழை மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி கலைசெல்வனை தொடர்பு கொண்டோம் போன் எடுக்காத சூழலில் ஏரியா போலீஸாரிடம் பேசினோம் ' என்ன சொல்ல, எல்லாமே மர்மமா நடக்குது சார்.'என்கிறார்கள்.
- பழனிவேல்