தருமபுரி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தர்மி சந்தர்-காஞ்சனா தம்பதி கடந்த 17 வருடமாக பாப்பிரெட்டிப்பட்டியில் செருப்பு கடை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கடைக்கு செங்கல்பட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பேர் செருப்பு வாங்க வந்துள்ளனர். அப்போது கடை உரிமையாளரான தர்மிசந்தரிடம் விலை அதிகமாக உள்ளது என தரக்குறைவாக பேசியுள்ளனர். அவர்களிடம் மரியாதையாகப் பேசும்படியும் இல்லையென்றால் அவர்களுக்கு செருப்பு கிடையாது எனச் சொல்லி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் கடை உரிமையாளரான தர்மிசந்தரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அதனைத் தொடர்ந்து தர்மி சந்தர் பாப்பிரெட்டிபட்டி காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்துப் புகார் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வடமாநில இளைஞரை தாக்கும் வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.
- பொய்கை.கோ.கிருஷ்ணா