தேன்கனிக்கோட்டை அருகே தேசத் தலைவர்களை பேரூராட்சி நிர்வாகம் அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சியில் காவல் நிலையம் எதிரில் பேரூராட்சிக்கு சொந்தமான குடி தண்ணீர் கிணறு மற்றும் (பம்ப்செட்)மோட்டார் அறை அமைந்துள்ளது.
இந்த இடத்தில் மோட்டார் (பம்ப்) அறையின் சுவற்றில் தேசத் தலைவர்களான தந்தை பெரியார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி ஆகியோரின் உருவப்படங்களை கெலமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரையப்பட்டுள்ளது.
இந்த இந்த இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு முறையும் தலைவர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் இந்த பகுதியில் உள்ள மக்கள் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் அப்படி ஒவ்வொரு ஆண்டும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் நாளுக்கு நாள் குப்பைகளும் சாக்கடைகளும் பெருகிக்கொண்டே வருகிறது.அதனை அப்புறப்படுத்த நாங்களும் முயற்சி மேற்கொண்டு ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அதனை நாங்களே அப்ரூவப்படுத்தி அந்த பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்கிறோம் என்றனர்.
அதோடு இந்த உருவப்படங்கள் இருக்கின்ற இடத்தில் குப்பைகளை சமூக விரோதிகள் கொட்டியுள்ளனர். மேலும் உருவப்படங்கள் சிதலமடைந்தும், வண்ணங்கள் பெயர்ந்தும், அரைகுறை உருவமாக காட்சியளிக்கிறது.
இது மெயின்ரோட்டில் இருப்பதாலும், காவல்நிலையத்தின் அருகில் இருப்பதாலும் குப்பை மேடாக இருக்கிறது.அந்த குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை மேலும் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடினர். நேற்று சுவற்றில் வரையப்பட்டுள்ள சிதலமடைந்துள்ள தேச தலைவர்களின் உருவபடங்களை பார்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் பொதுமக்கள் அப்படங்களுக்கு பூமாலை அணிவித்து மரியாதை செய்தனர். இனியாவது பேரூராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளுமா..?
பொய்கை கோ.கிருஷ்ணா