அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: வழக்கில் இருந்து விலகும் உயர்நீதிமன்ற நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் அறிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக நீதிபதி சக்திவேல் இன்று அறிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com